திரு.ஜகத் சட்டீஸ்கர்_தலைநகர், ராய்பூரில் ரிக்க்ஷா இழுப்பவர். குடும்ப தலைவர். ஒரு நல்ல நாளில், அவர் ரூ.200 வரை சம்பாதிக்க முடியும்; மோசமான நாட்களில், அவர் ரூ.100 க்கே_போராட வேண்டும். இந்த பணம் அவருடைய ஆறு பேர் கொண்ட_குடும்பத்திற்கு சாப்பாட்டுக்கு சரியாக இருக்கும். அவர் ஒரு நாள் அல்லது இரண்டு வேலை

வெளியே போக முடியாது என்றால், நிதி அழுத்தம் வீட்டில் கழுத்தை நெரிக்கும். சில மாதங்களுக்கு முன்பு வரை, இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு கஷ்டத்தை எதிர்கொள்ள நேரும். அரிசி, கோதுமை, சர்க்கரை, மற்றும்_மண்ணெண்ணெய் ஆகியவற்றை நியாய விலை கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வாங்கி பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த கடைகள் முன் எப்பொழுதும் நீண்ட வரிசை நின்று கொண்டே இருக்கும். அவருடைய ரேஷன் கடை ஒதுக்கீடு_பெற நாள் முழுக்க வரிசையில் காத்திருந்த காலங்கள் பல. சில நேரங்களில், மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். பிழைப்பு நடத்துவதா அல்லது ரேஷன் கடையில் நிற்பதா என்று திண்டாடிய நாட்கள் உண்டு.

ஆனால் இப்போது அவருக்கு அத்தகைய கவலை ஒன்றும் இல்லை. காரணம், சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு. ஆம். சட்டீஸ்கர் அரசு பொது விநியோக முறையை சீர்திருத்தி புதுமையான திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் கறுப்பு சந்தை மற்றும் ஊழல் அறவே ஒழிக்கப் படுகிறது. திரு.ஜகத் போன்ற  ஏழைகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வாழ்க்கையை வழிவகை செய்யக் கூடிய அற்புதமான திட்டத்தை அந்த மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. "CORE PDS" என்று பெயரிடபட்டுள்ள இந்த திட்டம் சமீபத்திய தகவல் தொழில்நுட்ப கருவிகளை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட் கார்டுகளின் உதவியுடன் செயல் படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் கண்காணிக்க படும்.

இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்:

பாரம்பரிய ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக திரு.ஜகத் போன்ற பொது மக்களுக்கு அவரது ரேஷன் உரிமத்தை கொண்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் ஒவ்வொரு குடும்பத்தின் அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்ய பட்டு இருக்கும். ஒவ்வொரு மாதமும் அந்த குடும்பத்தின் கணக்கில் எத்தனை பொருட்கள் பெற பட்டுள்ளது இன்னும் எத்தனை பாக்கி உள்ளது போன்ற அனைத்து விவரங்களும் இந்த ஸ்மார்ட் கார்டுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் செயற்கைகோள் மூலம் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ரேஷன் கடையில் மக்கள் வரிசையில் இருந்தால்; மற்றொரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம். இது நவீன வங்கியை போல். வாடிக்கையாளர்கள் எந்த கிளையில் வேண்டுமானாலும் சென்று பணத்தை போடவோ, எடுக்கவோ முடியும் அதே போல் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம். தற்போது இந்த திட்டம் மூலம் சுமார் 75,000 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வெற்றிகரமாக செயல் பட்டு கொண்டிருக்கும் இந்த திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் செயல்பாட்டில் இருக்கும்.

ரேஷன் கடைகள் கணிப்பொறி மூலம் எவ்வுளவு சரக்கு பெற பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு முறையும் தெரிவிக்க வேண்டும்; அதை அரசாங்க கிடங்கில் உடனடியாக சரி பார்க்கப் பட்டு பதிவு செய்து கொள்ளப் படுகிறது.

இந்த திட்டத்திற்கு முன்பு, கணினிமையம் ஆக்கபடாத போது சரக்குகளை கொண்டு செல்லும் போது திருட்டு ஏற்படும். அது மட்டும் இன்றி அரசாங்க கிடங்கில் இருந்து கொடுக்கப் படும் சரக்கும்; ரேஷன் கடைக்கு போய் சேரும் சரக்கும் சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிவது மிக கடினம். தற்போது இந்த தவறுகள் அறவே தடுக்கப் படுகிறது. அது மட்டும் இன்றி ஸ்மார்ட் கார்டுகள் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எத்தனை பொருட்கள் பெறப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக பார்க்க முடியும்.

கணினிமையம் செய்யாத பட்சத்தில் ரேஷன் கடைகாரர் பணத்திற்கு ஆசை பட்டு மக்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி கள்ள சந்தையில் பொருட்களை விற்பது என்பது நாடு முழுவதும் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் நடந்து கொண்டிருக்கும் அதிகார வர்கத்தின் கொடுமை.

வெற்றிகரமான திட்டம்

ஒரு திட்டம் என்று எடுத்து கொண்டால், அது தீட்டப்படுவது என்பது வேறு வெற்றிகரமாக செயல் படுத்தப் படுவது வேறு. இந்த "CORE PDS" முறை அமல் படுத்தப்பட்ட பிறகு இது போன்ற ஏமாற்று வேலைகள் செய்ய முடியாது. தற்போது அமல் படுத்தப்பட்டது வரை திட்டம் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தில்லியில் எரிபொருள் நிலையங்களில் விற்கப்படும் அரைவாசி பெட்ரோல்; ரேஷன் கடைகளில் இருந்து திருடப்படும் மண்ணெண்ணெயுடன் கலப்படம் செய்யப் படுவதாக நம்பப்படுகிறது.

குறைந்த பட்சம் 40% ரேஷன்  பொருட்கள் கள்ள சந்தைக்கு போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே தேசிய ஊழல் ஒரு ஆண்டிற்கு ரூ 16,000 கோடி வரை இருக்க கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர். சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடைபெற்று வரும் இத்தகைய மாபெரும் அக்கிரமத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில் முன்மொழிய பட்டிருக்கும் இந்த திட்டத்தை ஒரு புரட்சி என்று கூறலாம். இதற்காக பாரதிய ஜனதா கட்சி முதல்வரான திரு.ரமன் சிங் அவர்களை கை கூப்பி வணங்குவதில் தவறில்லை.

ரேஷன் கார்டுகள் கணினிமயம்

சட்டீஸ்கரில் ரேஷன் கார்டுகளை கணினிமயமாக்கும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டு 2007-08 ல் முடிக்கப்பட்டது.

பயனாளியின் கோரிக்கையின் படி, ரேஷன் கடைக்காரர் அவர் வாங்க விரும்பும் பொருட்களை கணினியின் மூலம் பதிவேற்றம் செய்வார். அதன்படி ரசீது அச்சிடப்படும் பிறகு பொருட்கள் பயனாளியிடம் வழங்கப்படும்.

முதல்வர் ரமன் சிங் இதை "அன்னப்பூர்னா ஏடிஎம்" (தானியங்களை எடுக்கும் ஏடிஎம்) என பெயரிட்டுள்ளார்.

பயனாளிகள் ஊரில் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்க முடியும். அவர் ஒரு கடையில் கோதுமை வாங்கவும் மற்றொரு கடையில் இருந்து சர்க்கரை வாங்கவும் சுதந்திரம் உண்டு. அவர் வாங்கும் பொருட்களின் விவரங்கள் எல்லா நேரங்களிலும் ஸ்மார்ட் கார்டில் தோன்றும்.

திரு.தஹ்ஷில் என்பவர் ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறார். அவர் கூறுவது "ரேஷன் அட்டை இருந்த போது பொருட்களை வாங்க குடும்ப தலைவர் ரேஷன் கடைக்கு போக வேண்டியிருந்தது அனால் இப்போது என் குழந்தைகள் கடைக்கு ஸ்மார்ட் கார்டு எடுத்து சென்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரேஷன் வாங்கி வருகின்றனர்". இதை போன்று மற்ற மாநில மக்களும் தங்கள் மாநிலத்திற்கு இந்த திட்டம் செயல்ப் படுத்த படாத என்று ஏங்குகின்றனர்.

பல ஆண்டுகளாக ஆட்டம் ஆடிய ரேஷன் கடைகாரர்கள் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தது மட்டும் இன்றி மக்களை திண்டாடவும் செய்துள்ளனர். ஆனால் சட்டீஸ்கரில் அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. ராய்ப்பூர், சக்தி நகரில் தங்கியிருக்கும் திருமதி.பிரதான் தனது பகுதியில் கடைக்காரர் ஒரு மாதம் எடுக்க தவறினால் அவர் அடுத்த மாதம் ரேஷன் கொடுக்க முடியாது என்று கூறுவதாக சொல்கிறார். மேலும் திருமதி.பிரதான் கூறுவதாவது "நாங்கள் ஏழைகள், தினசரி ஊதியம் சார்ந்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்" சில நேரங்களில், திருமதி.பிரதான் போன்ற மக்கள் ரேஷன் வாங்க போதுமான பணம் இல்லாமல் இருப்பதும் உண்டு. முன்னதாக, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இப்போது ஒரு ரேஷன் கடைகாரர் சரி இல்லை என்றால் மக்கள் மற்றொரு கடையை நோக்கி நகர முடியும்.

ரேஷன் கடைகள் மத்தியில் போட்டி

சட்டீஸ்கரில் பல வரவேற்பில்லாத ரேஷன் கடைகள் மூட பட்டுள்ளன. சட்டீஸ்கர் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் திரு.கௌச்லேந்திரா சிங் கூறுவதாவது "CORE PDS திட்டம் தொடங்கிய பின்னர், ராய்ப்பூரில் சுமார் 25 கடைகள் மூடப்பட்டிருக்கும், ரேஷன் கடை ஒதுக்கீடு பங்கு 25 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று நிபந்தனை உள்ளது அதை நிறைவேற்றாத இந்த ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது".

இது ரேஷன் கடைகள் மத்தியில் போட்டியை நிலவ செய்கிறது. இந்த போட்டி ரேஷன் கடைகாரர்களை தரமான பொருட்களை வைத்துக் கொள்ளவும் வாடிக்கையாளர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்ளவும் உதவுகிறது.

மொபைல் ரேஷன் வேன்கள்

இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து மொபைல் ரேஷன் கடைகள் தொடங்க பட்டுள்ளது. மொபைல் ரேஷன் வேன்கள் நகரத்தை சுற்றி நகரும்; அந்த வேனில் அனைத்து ரேஷன் பொருட்களும் இருக்கும். ரேஷன் கடைகளில் அடிக்கடி சில பொருட்கள் கிடைப்பது இல்லை. அனால் இந்த மொபைல் வேனில் அனைத்து பொருட்களும் கிடைப்பதாகவும் இது ரேஷன் கடைகளில் உள்ள பற்றாக்குறை சமாளிக்க உதவுகிறது என்று மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில், அரசு பெறப்படும் புகார்களில் 25 சதவீதம் ரேஷன் கடை முறைகேடுகள் தொடர்பானவை. ஆனால் இப்போது ராய்ப்பூரில், இத்தகைய புகார்கள் கிட்டத்தட்ட பூஜ்யமாக குறைந்துள்ளதாம்.

சத்தமே போடாமல் இத்தகைய அற்புதத்தை செய்து வரும் சட்டீஸ்கர் பாரதிய ஜனதா ஆட்சியையும் முதல்வர் திரு.ரமன் சிங் அவர்களையும் நாம் மனமார பாராட்டுவோம். மக்கள் சேவை தொடரட்டும்.

நன்றி -எஸ்.ஜி.சூர்யா

Leave a Reply