பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர்  குறித்து யாரும் வாய் திறக்க வேண்டாம் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து யாரும் வாய் திறக்க வேண்டாம் என தங்கள் கட்சியினரை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவேண்டாம் என கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து கட்சியின் மத்திய பாராளுமன்ற குழு தான் இறுதி முடிவுஎடுக்கும்.

எனவே இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பினால் , இந்தபதிலை சொல்லிவிடுங்கள். ஊகத்தின் அடிப்படையில் முன்கூட்டியே எதுவும் கூறவேண்டாம் . ஒரு வரையறைக்குள் கட்சியினர தங்களது கருத்துகளை தெரிவிக்கவேண்டும். என்று ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார் .

Leave a Reply