தலைநகரின் உச்சத்தை தொட்ட மோடியின் புகழ் டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களிடையே நடந்த வாக்கெடுப்பின் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் புகழ் பாரதத்தின் தலைநகரிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது

ஸ்ரீராம் கல்லூரி வருடம் வருடம் வர்த்தக மாநாட்டை நடத்துவதும், அதில் கலந்துகொள்ள உள்ள முக்கிய விருந்தினரை மாணவர்களிடையே வாக்கெடுப்பை நடத்தி தேர்ந்தெடுப்பதும் வாடிக்கை.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான கூட்டத்துக்கு யாரை அழைக்கலாம் என மாணவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இந்த வாக்கெடுப்பு பட்டியலில் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் மேலும் ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் நரேந்திர மோடி பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று முதலிடத்தையும் . ரத்தன் டாட்டா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

"கல்லூரி மாணவர்கள் அமைப்பு 10-15 முக்கிய நபர்களுக்கு அழைப்பு கடிதத்தை அனுப்பியது. இதில் குஜராத் முதல்வரே முதலில் தொடர்புகொண்டு சம்மதம் தெரிவித்தார், அதுவும் கடிதம் அனுப்பிய மூன்றாம் நாளே. பேச்சாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஜனநாயக முறைப்படியே நடந்தது" கல்லூரி முதல்வர் பி.சி.ஜெய்ன்

எது எப்படியோ இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீராம் கல்லூரிக்குள் பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று நுழையும் நரேந்திர மோடி, சற்றே கொஞ்சம் அருகில் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்குள் பிரதமராக நுழையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பெருவாரியான மாணவர்களின் எண்ணங்களும் , பெருவாரியான பாரத மக்களின் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும் என்றே நம்ம்புவோம்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply