நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம் நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம். நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது அவநம்பிக்கை காணப்படுகிறது. என்று ஸ்ரீராம் கல்லூரியில் நடந்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசினார் –

மேலும் அவர் பேசியதாவது ; மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். சுதந்திர பேராட்டத்தில் முன்னிலை வகித்தது குஜராத். மக்கள் நலனிலும் நல்லாட்சியிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம். நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது அவநம்பிக்கை காணப்படுகிறது. இவ்வாறு அவநம்பிக்கை சூழ்ந்திருந்தாலும் சிறப்பான மாற்றத்தை நம்மால் கொண்டு வரமுடியும். நமது நாட்டில் இயற்கை வளம் நிரம்பியுள்து. எனினும் நம்மால் அதனை சரிவர பயன்படுத்த முடியவில்லை.

இளைஞர்கள் சிறந்த வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கிறார்கள். அவர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேணடும். மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதே இன்று நம்முன் உள்ள சவால். எதிர்காலம் குறித்து இளைஞர்கள் நம்பிக்கையுடன இருக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் விவசாயத்துறை 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நீர்ப்பற்றாக்குறை இருந்தபோதும் வேளாண் உற்பத்தியில் அரசு சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக, குஜராத்தில் கடந்த 12 ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி 400 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கால் நடைகளுக்கு நோய்த்தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 120 வகை நோய்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளன. அறிவியலை சோதனைச் சாலையில் இருந்து களத்திற்கு கொண்டு சென்றது குஜராத் மாநிலம். உலகிலேயே முதல் முறையாக தடயவியல் துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதும் குஜராத்தில்தான்.

இவ்வாறு மோடி உரையாற்றினார்.

Leave a Reply