நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வருமானத்தை அதிகரிபபதா குடும்பச் சொத்துகளை விற்ப்பதா நம்ம வீட்ல நிர்வாகம் சரியா பண்ணாம ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வருமானத்தை அதிகரிச்சுச் சமாளிக்கிறது திறமையா இல்லை, ஏற்கனவே இருந்த குடும்பச் சொத்துகளை விற்று விற்று அதை மேம்போக்காக சமாளிக்கிறது பெருமையா?

இதைக் கேளுங்க….

நம்ம நாட்டோட பொருளாதார நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் ( BHEL, ONGC, OIL, NTPC etc..) பங்குகளை தலா 10% வரை இந்த ஆண்டு விற்பனை செய்வதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, மொத்தப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு 18% மட்டுமே இருக்கிறது.
முன்பு ஆயுதங்களோடு படையை அனுப்பி ஒரு நாட்டைப் பிடித்தார்கள். இப்பொழுது கரன்சிக் காகிதங்களுடன் அனுப்பிப் பிடிக்கிறார்கள். இந்த காங்கிரஸ் நிர்வாகத்திற்கு இது தெரியாதா இல்லை நமக்கெல்லாம் தெரியாதுன்னு நினைச்சுட்டு செய்றாங்களா?

நம்ம இளைய திலகம் மாதிரி எல்லோரும் அடித்தொண்டையில் ஒரு தடவை சொல்லுங்க…
" என் தேசம்ம்ம்…. என் கடன்ன்ன் " 

நன்றி ; ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply