நேருவை போன்று   நரேந்திர மோடியும் மிகவும் பிரபலமானவர் நாட்டின் முதல் பிரதமர், நேருவை போன்று , குஜராத் முதல்வர், நரேந்திர மோடியும் மிகவும் பிரபலமானவர், என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி., ஆமதாபாத்தில் நடைபெற்றுவரும், கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அசோக் சிங்கால் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக, நாட்டின் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் பிரதமர், ஜவகர்லால்நேரு; அதே போன்றதொரு நிலை இப்போது முதல் முறையாக நிலவுகிறது.

அடுத்த பிரதமராக, நரேந்திர மோடியே வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அரசியலுக்காக, நாட்டில் அமைதியைகெடுக்க எங்கள் இயக்கம் ஒரு போதும் முயன்றதில்லை; அது எங்களது விருப்பமும்மல்ல. விஸ்வ இந்து பரிஷத், இந்து சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. இந்துக்களின் கனவை நனவாக்குவது குறித்து விஸ்வ இந்து பரிஷத் செயலாற்றிவருகிறது. என்று அசோக் சிங்கால் தெரிவித்தார்.

Leave a Reply