மத்திய அரசின் தவறான செயல்பாட்டினால் இலங்கை  பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் , மத்திய அரசின் தவறான செயல்பாட்டினால் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என பா,ஜ,க தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) அறிக்கையின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு, இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிப்ரவரி 20-ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான சிக்கலான பிரச்னை. எனவே, அரசிதழில் வெளியிடும் முன்பு சம்பந்தப்பட்ட தமிழக – கர்நாடக முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதுதான் பாஜகவின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply