அப்சல்குருக்கு  இன்று  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2013-ல் பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான். தண்டனை நிறைவேற்றப் பட்டதை

தொடர்ந்து திகார்சிறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவரது சொந்தமாநிலமான ஜம்முகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. அப்சல்குருவை தூக்கிலிட காஷ்மீரில் இருந்த சிலதீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன இதனை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாவண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் 7.56 மணிக்கெல்லாம் அப்சல்குருவுக்கு தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் தெரிவிகின்றன.

Leave a Reply