சுஷீல் குமார் ஷிண்டேவைக் கண்டித்து பிரதமரின் வீட்டு முன்பு பாஜக ஆர்ப்பாட்டம் காவித்தீவிரவாதம் என கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவைக் கண்டித்து பிரதமரின் வீட்டு முன்பு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக-வின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது : ஷிண்டே கருத்தினால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் கூறிய கருத்துக்கு எந்த வித மன்னிப்போ அல்லது விளக்கமோ காங்கிரஸிடமிருந்து இதுவரைக்கும் வரவில்லை.

இதனை தேசியக்குற்றமாக பா.ஜ.க கருதுகிறது. ஷிண்டே, மன்னிப்பு கேட்கவேண்டும். இதை வலியுறுத்தி வரும் 20ம் தேதி பிரதமர்வீட்டை முற்றுகையிடுவோம். இந்தப்போராட்டம் நாடுதழுவிய அளவிலும் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply