இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்  இந்த வருட இறுதிக்குள் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது , அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு மேலும் இது குறித்து கூறியதாவது, தங்களுக்கு வந்துள்ள தகவலின்படி, இந்தாண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அனைத்து துறைகளிலும் தோல்வியைகண்ட காங்கிரஸ் கட்சியை தூக்கியெறிய நாட்டுமக்கள் தயாராகி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு போட்டி பாஜக மட்டுமேயன்றி, இங்கு மூன்றாம் அணி என்ற பேச்சுக்கே இடம இல்லை என்று அவர் கூறினார். பயங்கரவாதி அப்சல்குரு, வின் தூக்கு நிகழ்வு, காலம்கடந்த‌ நடவடிக்கை என்று தெரிவித்தார்.

Leave a Reply