இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக லஷ்கர் இ தொய்பா மிரட்டல் தீவிரவாதி அப்சல்குருவை தூக்கிலிடத்தற்கு பழிவாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.

அப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டிக்கும்வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு பழிவாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல்விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து மாநில காவல் துறையையும் உஷாராக இருக்குமாறு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

Leave a Reply