அப்சல் குருவு க்கான தூக்கு கால தாமதமான ஒன்று  அப்சல் குருவு க்கான தூக்கு தண்டனை, மிகவும் கால தாமதமாக நிறைவேற்றப் பட்டுள்ளது என்று , பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.இது குறித்து பாஜக தலைவர்களின் கருத்து கீழே வருமாறு

இது குறித்து நரேந்திர மோடி கூறியதாவது: பயங்கரவாதி அப்சல்குருவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குதண்டனை, காலம் கடந்த நடவடிக்கையாக இருந்த போதிலும், அதை தான் வரவேற்பதாகவும் . கசாப்பை தூக்கிலிட்ட போதே, பா.ஜ.க அப்சலையும விரைந்து தூக்கிலிடு மாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்

இது குறித்து பா.ஜ.க., செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: அப்சல் குருவுக்கான, தூக்குதண்டனையை, 2005லேயே, சுப்ரீம்கோர்ட், உறுதி செய்துவிட்டது. அப்சல் சார்பில்  ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்யப்பட்ட, மறுஆய்வு மனுவும், 2007ல், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அப்போதே, தண்டனையை நிறைவேற்றி இருக்கவேண்டும். இந்த விஷயத்தில், மத்திய அரசு, தேவையில்லாமல் தாமதம் செய்துவிட்டது.

இதை போன்ற, கடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு, உடனடியாக தூக்குதண்டனை வழங்கவேண்டும்’ என்பதே, நாடுமுழுவதும் உள்ள, மக்களின் விருப்பம். இந்தவிருப்பத்தை, அரசு, நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்சல்குருவுக்கு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில், ஏன், இவ்வளவு_தாமதம் என்ற கேள்விக்கு, மத்திய அரசு, விடைய தர வேண்டும். இந்தவிவகாரத்தில், மனித உரிமைகள் பற்றிய விஷயங்களை, யாரும் எழுப்பக்கூடாது என்றார்.

பா.ஜ.க , துணை தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது : இந்திய ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும், பார்லிமென்டின் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் சம்பவத்துக்கு, மூளையாகசெயல்பட்டவன், அப்சல்குரு. அவனுக்கு தண்டனை, தாமதமாக நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனாலும், இதைவரவேற்கிறோம் என்றார்

ராஜிவ் பிரதாப் ரூடி ( பா.ஜ., ) : நாடுமுழுவதும் இருக்கும் மக்களால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருவிஷயம், மிகவும் தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும்,  இது வரவேற்கதக்க முடிவு என்பதில், எந்தசந்தேகமும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது என்பது, உலக நாடுகளுக்கு, இதன்மூலம், உணர்த்தப்பட்டுள்ளது. என்றார்.

Leave a Reply