மத்திய ,மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மையே  அலகாபாத் உயிரிழப்புக்கு காரணம் உ.பி., மாநிலம் அலகாபாத் ரயில்‌வே ஸ்டேசனில், கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலியானசம்பவம், மத்திய ,மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமை இன்மைக்கு ஏற்பட்டதோல்வி என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது, இவ்வ‌ளவுபெரிய அசம்பாவிதம் நிகழந்திருக்கும் நிலையில், ரயில்வேமேம்பாலம் சரிந்து விழவில்லை என்றும், கூட்டநெரிசல் காரணமாகவே, விபத்து நிகழ்ந்துள்ளதாக மத்தியஅமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது.

இவ்விபத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக திறமைக்கு ஏற்பட்டதோல்வி என அவர் கூறினார்.

Leave a Reply