ராஜிவ் காந்தி படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல்குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்முகாஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொந்தளித்திருக்கிறாரே?

 

தமிழ்த்தாமரை டால்க்

இந்த பாரத தேசத்தின் முதுகெலும்பாகிய பாராளுமன்றத்தை தாக்கியவர்களை பரலோகம் அனுப்பாமல் பந்திவைத்து விருந்து வைக்க சொல்கிரார. காஷ்மீரில் தீவிரவாதிகளின் மீதான இவர்களது பார்வையே இப்படித்தான் இதன் வெளிபாடுதான் இவை.

ராஜிவ் காந்தி படுகொலையும் , பாராளுமன்ற தாக்குதலும் ஒன்றாகிவிடுமா?. இலங்கை பிரச்னையும் காஷ்மீர் பிரச்னையும் ஒன்றாகிவிடுமா?. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அத்துமீறி சிங்களர்கள் குடியெற்ற படுகிறார்கள். தமிழர்களின் சொந்த வீடுகள் மற்றும் நிலங்கள் பிடுங்கப்பட்டு காட்டுக்குள் விரட்ட படுகிறார்கள். இதுவரைக்கும் 1067 இந்து கோவில்களை இடித்து புத்த விகாரங்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை காரணம் காட்டி ஒரு லட்ச்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசே துணை போகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலைக்கு மூலகாரணமாக சொல்லப்பட்ட பிரபாகரனையே இந்திய அரசின் துணையுடன் கொன்று விட்டதாக இலங்கை அரசே அறிவித்துவிட்டது. ஆகா மொத்தத்தில் ராஜீவ் காந்தியை கொன்றதற்க்காக பலலட்சம் தமிழர்கள் பலியிட பட்டிருக்கிறார்கள். அந்த இயக்கத்தையும் அதன் முக்கிய தலைவர்களையும் கிட்டத்தட்ட தண்டித்தும் விட்டார்கள்.

காஷ்மீரின் நிலைமையோ வேறு!. அங்கு ஒருசென்ட் நிலத்தைக்கூட நம்மால் வாங்க முடியாது . அமர்நாத் யாத்திரைக்கு போகவேண்டும் என்றால் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கைத் தமிழர்கள் போன்று காஷ்மீர் இந்தியர்கள் ஒன்னும் மொழியால் அடிமை இல்லை, வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட வில்லை, அனைத்து மாநில மக்களை போன்று எல்லா சலுகைகளையும் பெற்று சிறப்பு சட்ட அந்தஷ்த்துடன் வாழ்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் இயக்கங்கள் எதுவும் இந்தியாவில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடவில்லை. ஆனால் 2001 ஆண்டு பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு எத்தனை எத்தனை குண்டு வெடிப்புகள், உயிர் பலிகள், 2008 ம் ஆண்டு ஒன்பது தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு கொன்றார்கள் . இதில் 160 க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர். 2011ம் ஆண்டு அப்சல்குருவை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் ஒரு குண்டுவெடிப்பு. இதில் 11 பேர் பலியாகினர். இப்படி தொட்டதர்க்கெல்லாம் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அப்சல்குருக்களை கூட நம்மால் தைரியமாக தண்டிக்க முடியவில்லை . ஏவிய ஹபீஸ் சயீத்கள் (லஷ்கர் ஈ தொய்பாவின் தலைவன் ) பாகிஸ்தானில் அமைதியாக புதிய புதிய அப்சல்குருக்களை மேலும் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தினம் தினம் குண்டு வைத்து நம்மை அளிக்க துடிக்கும் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாகதான் நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஒரு அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை பாகிஷ்தான் தீவிரவாத பயிற்சி பள்ளியில் பயின்ற ஓராயிரம் அப்சல் குருக்களை யோசிக்க செய்யும் . ஒரு சில அப்சல்குருக்களை நல்வழிக்கு தடம் மாறவும் செய்யும்.

அப்சல்குருவின் தூக்கு தண்டனைக்கு லஷ்கர் ஈ தொய்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளது, கொந்தளித்துள்ளது இந்தியா முழுவதும் குண்டு வைப்பேன் என்று மிரட்டியும் உள்ளது . காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் , கொந்தளித்துள்ளார், காஷ்மீர் இளைன்கர்கள் தடம் மாறுவார்கள் என்று மிரட்டியும் உள்ளார். அப்படி என்றால் இவர்கள் இருவரது கொள்கைகளும் ஒன்றாகிவிடுமா?.

வேற்றுமையும் ஒற்றுமையும் பார்க்கவேண்டும் என்றால் அனைத்திலும் பார்க்கலாம்.எது எப்படியோ ஹபீஸ் சயீத்தின் கொந்தளிப்பு குழம்பிய குட்டையில் எத்தனை மீனை பிடிக்கலாம் என்பதே!.உமர் அப்துல்லாவின் கொந்தளிப்போ இதைவைத்து எத்தனை ஓட்டை பொறுக்கலாம் என்பதே!.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply