மோடி உலக பொருளாதாரத்தை சிறந்தநிலைக்கு எடுத்துசெல்கிறார். குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் சிறந்த தலைமை , நிர்வாகத் திறன், அவர் சார்ந்த மாநிலத்தை மட்டும்மல்லாது ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்திரிக்கிறது என்று அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் பாலி‌யோமவேகா தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; நரேந்திரமோடியின் சிறப்பான நிர்வாகத்தால், குஜராத் இந்தியாவின் பொருளாதார வலிமையின்மையமாக திகழ்கிறது. உலகமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகளை மோடி உருவாக்கி உலக பொருளாதாரத்தை சிறந்தநிலைக்கு எடுத்துசெல்கிறார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான போர்டு , ஜெனரல்மோட்டார்ஸ் தங்களது கம்பெனிகளை குஜராத்தில் நிறுவிவருகின்றன. எனவே அமெரிக்கா, நரேந்திரமோடியின் சிறந்த யோசனைகளை வெளிப்படையகாவும், முழுமையாகவும் அங்கீகரித்து அவருக்கு ஆதரவுவழங்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply