அருண் ஜெட்லியின் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்க்க முயன்ற சதி முறியடிப்பு பாராளுமன்ற மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லியின் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்க்க அவரது செல்போன் தொடர்புகள் குறித்த பட்டியலை சேகரிக்கமுயன்ற டெல்லி போலீஸ்காரர் அர்விந்த் தபாஸ்(32) சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்க பட்டுள்ளது.

டெல்லி காவல் துறை உதவி கமிஷனர் ஒருவரின் இமெயில் மூலமாக அருன் ஜெட்லியின் செல்போன் உரை யாடல்கள் குறித்த பட்டியலை தனியார் செல்போன் நிறுவனமான ஏர்டெல்லிடம் இருந்து இவர் சேகரிக்க முயன்றுள்ளார்.

பொதுவாக தொலைதொடர்பு நிறுவனங்கள் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் அவர்களது தேவைக்கு ஏற்ப்ப தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். இருப்பினும் மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தில் உள்ள அருண் ஜெட்லியின் விவரங்களை தருவதில் தயக்கம் காட்டியுள்ளது. மேலும் சந்தேகம் அடைந்த அந்த நிறுவனம் காவல்துறை உயர்மட்டத்தில் இதுகுறித்து விசாரித்த பொழுது மிகபெரிய சதி வெளியாகியுள்ளது .

இதனையடுத்து, போலீஸ்காரர் அர்விந்த் தபாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இருப்பினும் இதில் அர்விந்த் தபாஸ் பலிகிடா ஆக்கப்பட்டுள்ளார , இதில் உயர் அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்க படுகிறது .

இப்படிதான் 2005 ம் ஆண்டு அமர் சிங்கின் தொலைபேசி உரையாடலை திருட்டு தனமாக பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை செய்தவர்கள் தனியார் துப்பு அறியும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் ஒருசில அரசியல் வாதிகளுக்கு தொடர்பிருந்ததும் தெரிய வந்தது குறிப்பிடதக்கது

Leave a Reply