தேசியம் தலை நிமிர என் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணிப்பேன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஜி அவர்களின் 68-வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது . மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் இருக்கும் அவரது இல்லத்தில் தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

அதைதொடர்ந்து கட்சி தலைமை அலுவலகமான கமலாயத்தில் தொண்டர்களை சந்தித்தார். தனது பிறந்தநாள் செய்தியாக இல.கணேசன் கூறியதாவது

உலகரங்கில் பாரதம் தலை நிமிர தேசிய அளவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும். அதேநேரத்தில் தமிழக அரசியல் களத்திலும் தேசியம் தலை நிமிரவேண்டும், அதற்காக என் வாழ் நாள் முழுவதையும்_அர்ப்பணித்து தொண்டாற்றுவேன். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கே வரமுடியாது என்று கூறியுள்ளார். கடவுள்அருளால் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாட்டிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை காணவேண்டும் என கூறினார்.

Leave a Reply