மார்க்கண்டேய கட்ஜூ  பதவிவிலக வேண்டும் காங்கிரஸ் அல்லாத ஆளும்மாநிலங்கள் குறித்து இந்திய பிரஸ்கவுன்சில் தலைவரும், சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, பாரபட்சமான விமர்சனங்களை செய்துவருகிறார். உடனடியாக அவர் பதவிவிலக வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது.

இதுகுறித்து பாஜக ராஜீவ்பிரதாப் ரூடி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ காங்கிரஸ் அல்லாத ஆளும்மாநிலங்கள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்துவருகிறார். அது மம்தாபானர்ஜி ஆளும் மேற்குவங்கமாக இருந்தாலும் சரி, ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆளும்_பீகாராக இருந்தாலும் சரி, குஜராத்தை ஆளும் மோடி_அரசாக இருந்தாலும் சரி, இப்படி காங்கிரஸ் அல்லாத எதிர்க் கட்சி அரசுகளை எல்லாம் கட்ஜூ தவறாக விமர்சித்துவருகிறார். எனவே பாரபட்சமாக செயல் படும் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என பிரதாப்ரூடி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

Leave a Reply