வைகோ, விஜய காந்த், ராமதாஸ்,  பா.ஜ.க தலைமையில்  கூட்டணி அமைக்கவேண்டும் வைகோ, விஜய காந்த், ராமதாஸ், ஆகிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பா.ஜ.க தலைமையில் இணைந்து கூட்டணி அமைக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

நாகர் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன்சம்பத் “தமிழகத்தில் தி.மு.க காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன . அ,தி,மு,க எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என தெளிவாக தெரிவித்துவிட்டது.

எனவே விஜய காந்த், ராமதாஸ், வைகோ ஆகிய கட்சித்தலைவர்கள் பாஜக தலைமையில் மூன்ம அணி அமைத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முயலவேண்டும்” என்றார்.

Leave a Reply