பட்ஜெட் கூட்டத் தொடரில்  ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து  பிரச்சனை எழுப்படும் ; பாஜக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து கூட்டணி கட்சி களுடன் இணைந்து பிரச்சனை எழுப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக நாடாளுமன்ற கட்சியின் செயற் குழு கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், ஹெலிகாப்டர் லஞ்சபேர ஊழல் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று பாஜக கூறியுள்ளது.

முறைகேடு நடைபெற்ற இந்தவிவகாரத்தில், பாதுகாப்புதுறை அமைச்சர் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும், வெளியுறவுதுறை அமைச்சர் ரத்துசெய்ய கூடாது என்றும் கூறுவது மத்திய அரசின் நிலையற்ற_தன்மையை காட்டுகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது

மேலும், ஹெலிகாப்டர் ஊழலில் மத்திய அரசின் நிலைபாடுதான் என்ன என்பதை விரைவில் வெளியிடவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply