காவி பயங்கரவாதம் ஒரு வழியாக  மன்னிப்பு கேட்டார் ஷிண்டே  காவி பயங்கரவாதம் என்ற தமது சர்ச்சைக்குரிய பொய் கருத்துக்காக ஒரு வழியாக உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே வருத்தம் தெரிவித்தார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சென்ற மாதம் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ஷிண்டே, பாஜக. பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதாகவும் , காவி பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் சாடினார். அவரது இந்த கருத்தை பாஜக மற்றும் காங்கிரஸின் ஒரு சில தலைவர்களே கடுமையாக எதிர்த்தனர். டில்லியில் பாஜக சார்பில் ஷிண்டேவின் கருத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ஷிண்டே ஒருவழியாக தனது கருத்துக்காக வருத்தம்தெரிவித்தார்.

Leave a Reply