ஹைதராபாத் குண்டுவெடிப்பு பழிவாங்கும் நடவடிக்கையாக  இருக்கலாம் அஜ்மல் கசாப், அப்சல்குரு ஆகியோருக்கான தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம் என பாஜக சந்தேகம் தெரிவித்துள்ளார்

இது குறித்து பாஜக மூத்த தலைவர் வெங்கய்யாநாயுடு கூறியதாவது, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும். அஜ்மல்கசாப், அப்சல் குருவுக்கு தூக்குதண்டனைக்கு பழிவாங்குவோம் என தீவிரவாதிகள் அறிவித்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஆகையால் இந்த சம்பவம குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply