ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு ஹூஜி தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? நாட்டையே உலுக்கியுள்ள ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு ஹர்ஹத் உல்ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர்வரை பலியாகி இருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே ஹைதராபாத்தில் இதே போன்ற குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஹூஜி தீவிரவாத இயக்கத்துடன் தொடர் புடையோரே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதேபோன்று அந்த அமைப்பும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. தற்போதும் அந்தஅமைப்பின் நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply