ஐதிராபாத்  குண்டுவெடிப்பு நாடாளுமன்ற   இரண்டு அவைகளிலும் அமளி நாடாளுமன்ற பட்‌ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும், நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இரண்டு அவைகளிலும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவை இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ஐதிராபாதில் நேற்று நடந்த குண்டுவெடிப்பிற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என பா.ஜ.க., நாடாளுமன்றத்தில் கூச்சலில் ஈடுப்பட்டது . மேலும் இந்தசம்பவம் குறித்து மேல்அவையில் விவாதம் நடத்தவேண்டும் என இடது சாரிகளும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் விவகாரங்கள் முடங்கின. இதனைஅடுத்து தொடரை இரு அவைகளும் இன்று மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டன.

Leave a Reply