ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடைய இடைத்தரகரை கைதுசெய்யுங்கள் என தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் (ஜீரோ ஹவர்) அவர் பேசியதாவது; ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகரை கைதுசெய்வதன் மூலம் எதிர் காலத்தில் இதை போன்ற முறைகேடுகள் நிகழா வண்ணம் தடுக்கமுடியும். இந்த விவகாரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் உரியவகையில் கையாளவில்லை,
பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியைத் தக்கவைத்து கொள்வதிலும், தன் மீதான நல்லெண்ணத்தை காப்பாற்றிக்கொள்வதிலுமே குறியாக இருக்கிறார் . இந்தபேரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றது யார் என்பதை அரசு கண்டு பிடிக்காமல், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து விட்டு, வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டு விட்டது என குற்றம் சுமத்தினார்.