உளவுத்துறை எச்சரித்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை ஹைதரபாத் குண்டு வெடிப்பு குறித்த விவாதம் நடத்தப்படும்விதமே சரியில்லை. பாராளுமன்றத்தில் ஷிண்டே தாக்கல்செய்த அறிக்கையில் அரசாங்கத்தின் உருப்படியான நடவடிக்கை எதுவுமே இல்லை என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; இது ஒரு தனிப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் அல்ல. நாட்டின் உறுதிநிலையை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சிகொடுத்து பணம்கொடுத்து ஊக்குவித்து வருகிறது ஒருநாடு. நமது அண்டை நாடு_ஒன்றே தீவிரவாதத்தை தூண்டி வருகிறது.

குண்டு வெடிப்பு நடக்கும் என உளவு துறை தந்த தகவலை ஆந்திர மாநிலத்துக்கு மத்தியஅரசு தெரிவித்துள்ளது. பெங்களூர், ஹைதரபாத், கோவை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. தகவல் தந்தும் ஆந்திர அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்கிறது . உளவுத் துறை தகவல் காவல் துறைக்கு வந்திருக்கலாம், தமக்குவரவில்லை என்கிறார் முதல்வர்.
என்று பேசினார் வெங்கையா நாயுடு.

Leave a Reply