பா.ஜ.க., மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தமிழக பா.ஜ.க இளைஞர் அணி தலைவராக பொன்.பாலகணபதியும், மகளிர் அணி தலைவராக தமிழரசியோகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க, மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், இரண்டாவது முறையாக தேர்வுசெய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் அனைத்துஅணிகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

மகளிர் மற்றும் இளைஞர் அணிக்கு புதியநிர்வாகிகளை நியமித்து, பா.ஜ.க, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:மகளிர் அணி பொதுச்செயலராக உமாரதி ராஜன், துணைத் தலைவர்களாக மகா லட்சுமி, உஷாசுந்தர், பொருளாளராக சக்தி மற்றும் 3 செயலர்கள், 11 செயற் குழு உறுப்பினர்கள், 3 சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இளைஞர் அணயின் பொதுச்செயலராக கமல குமார், துணை தலைவர்களாக கோபி நாத், கணேசன், ஜெய பிரகாசம், பொருளாளராக கீர்த்திகண்ணன் மற்றும் இருசெயலர்கள், 12 செயற் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply