இறைபணி தொடர கேரள சேவாபாரதியின் தொண்டு என் கடைசி காலத்தில் காசிக்குச் சென்று அங்கேயே உயிரை விட வேண்டும்.அப்போதுதான் இறைபதம் கிடைக்கும் என ஆயிரக்கணக்கானோர் காசியிலேயே தங்கிவிடுவதைக் காணலாம். அது போல் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இன்றும் கண்ணனின் பிருந்தாவனத்தில் இறைசேவைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க அங்கேயே தங்கி கிருஷ்ண பக்தியில் திளைக்கிறார்கள்.

இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் அவர்களைப் பாதுகாத்து,தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக சமீபத்திய பத்திரிகைச் செய்தி !!!

இந்தப் பெண்களையும் இறைவனுக்குச் சமமாகவே பக்தர்களும் வணங்குகிறார்கள்.அது போல,

குருவாயூர் என்றாலே நமக்கு கண்ணன் நினைவுக்கு வருவான்.

கேரளமாநிலம் குருவாயூரப்பன் சன்னதியிலே பிருந்தாவன் போலவே இங்கும் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தங்களை இறைசேவைக்கு அர்ப்பணித்து அங்கேயே தங்கிவந்தனர்.

குருவாயூர் கோவில் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு என தனியாக கட்டிடம்,உணவு,வசதி ஆகியவையும் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சேவை தொடர்ந்து வந்தது.

ஆனால்,தேவஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்த மாதாக்கள் தங்கி இருப்பதை சுமையாகக் கருதி,அவர்களை கோவிலைவிட்டு விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அவர்களுக்கான உணவு,இதர வசதிகளை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்தனர்.அப்பாவிப் பெண்களான அவர்களை,அந்த இடத்தைவிட்டு காலி செய்யுமாறு மிரட்டவும் துவங்கினர்.

அதன் உச்சகட்டமாக ஒரு நாள்

கிறிஸ்தவ மிஷனரிகளின் வேன்கள் அணிவகுத்து வந்து குருவாயூரப்பன் கோவில் அருகே நின்றன.

வேனில் இருந்து இறங்கிய கிறிஸ்தவப்பாதிரியார்களும் அடியாட்களும் கண்ணனின் இறை தொண்டுக்கு அர்ப்பணமான அந்தப் பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேன்களில் ஏற்றினார்கள்.தேவஸ்தானத்தின் முழு ஆதரவோடு அவர்களை சர்ச்சில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் குருவாயூரப்பன் தேவஸ்தானத்தின் சதி என்பதை மீடியா மற்றும் பத்திரிகை மூலமாக கேள்விப்பட்டு மக்களுடன் வெகுண்டெழுந்து போராடினர் ஆரியன்.இவர் பி.எஸ்.என்.எல்லின் என் ஜினியராக பணியாற்றி வந்த ஆரியன் பல போராட்டங்கள் செய்தும் தேவஸ்தானம் செவிசாய்க்கவேஇல்லை;

குருவாயூர் பகுதியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தொண்டர்களின் உதவியோடு அங்கேயே வாடகைக்கு கட்டிடம் எடுத்து தாய்மார்களை தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் ஆரியன்.

தற்போது அங்கு துவக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை மூலமாக சொந்தக் கட்டிடத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தாய்மார்களை பராமரிப்பதுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லமும் அங்கு நடத்திவருகிறார்.

ஆரியன் தற்போது சேவா பாரதி என்ற சேவை இயக்கத்தின் கேரள மாநில பொறுப்பாளராக தொண்டாற்றிவருகிறார்.

ஆதாரம்:விஜயபாரதம்,
கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply