ஐதராபாத் குண்டுவெடிப்பு  பாகிஸ்தானே காரணம்  ஐதராபாத் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானே காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே அத்வானி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது : இந்தியா மீது நேரடியாக போர்தொடுத்த போதெல்லாம் தோல்வியை தான் பாகிஸ்தான் சந்தித்துள்ளது. இதனால், மறை முகமாக போர்

நடத்துகிறது. எனவே இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி வருகிறது.

ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானே காரணம். இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தட்டிக் கழிக்க முடியாது. வாஜ்பாயை முஷாரப் சந்தித்த போது, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது. அதை பாகிஸ்தான் மீறக் கூடாது என்றார்.

Leave a Reply