இலங்கை தமிழர்களுக்கு, திமுக., செய்ததுரோகத்துக்கு, டெசோமாநாடு மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபைக்குசென்று, அவர்கள் முறையிட்டாலும், பாவமன்னிப்பு கிடைக்காது என்று , தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறியதாவது:தமிழகத்தில் பெண்கள்மீது ஆஸிட்வீச்சு சம்பவங்கள் அரங்கேறிவருவது, இளம்பெண்களின் முகத்தில் வீசுவதற்குதான் ஆஸிட் வியாபாரம் நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க தமிழக அரசு தீவிரநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

ராமர்பால பிரச்னை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது . சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதில் பாஜக 2வது கருத்து கிடையாது. அதேநேரத்தில் ராமர்பாலத்தை இடிக்கும் முயற்சி என்பது கூடாது.தர்மபுரியில் நடந்த ஜாதிமோதல்களுக்கு தீர்வுகாணும் வகையில், மார்ச், 25ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4 வரை, கிருஷ்ணகிரியில் துவங்கி, தர்மபுரி வழியாக சேலத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply