2013-14ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்…அலங்காரமான வார்த்தைகளால்…ஆன வாசமில்லாத "காகிதப்பூ பட்ஜெட்"

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மூ.கூ. அரசு "திக்கு தெரியாமல் செல்கிறது" என்பதற்கு …ஒராண்டில் 4 ரயில்வே அமைச்சர்கள் மாறியதே சான்று.

அரசு மற்றும் அதிகாரிகளின் "ஊதாரித்தனமான செலவுகளால்" எவ்வளவு வருமான வந்தாலும் ரெயில்வே நஷ்டத்தில் இயங்கிவருகிறது.
அழுக்கடைந்த —உடைந்த "கோச்சுக்கள்"—கிழிந்த சீட்டுக்கள், நாறும் "டாய்லெட்டுக்கள்"–திருடர்கள் –மற்றும் பிச்சைக்காரர்களின் தொந்தரவால் விழிபிதுங்கும் பயணிகளை காக்க "வாய்ச்சவடால்" அறிவிப்புக்கள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளது,,

தமிழ்நாட்டுக்கு புதிய ரயில்கள் ஏதும் இல்லை..பழைய ரயில்களே சில நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன..வாரம் ஒருமுறை என்பது இருமுறை ஆக்கப்பட்டுள்ளது..

போத்தனூர்–பொள்ளாச்சி அகலரயில் பாதைக்கும், கரூர்—நாமக்கல் அகலரயில் பாதைக்கும் எந்த நிதி ஒதிக்கீடும் செய்யப்படவில்லை..

ரயில் டிக்கட் கட்டணம் ஜனவரியிலேயே ஏற்றப்பட்டுவிட்டது…இப்போது விட்டகுறை தொட்டகுறையாக எக்ஸ்பிரஸ் கட்டணம்—தட்கால் கட்டணம்—ரிசர்வேஷன் கட்டணம்– என இவைகள் ஏற்றப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்திற்கு வாரமொருமுறை ரயில்போதாது..தினசரி ரயில் வேண்டும்–கோவை–பெங்களூரு–இரவுநேர ரெயில் நீண்டகால கோரிக்கை— நிறைவேறாதது வருத்தமே..

ஆண்டுக்கு 125 கோடி வருமான ஈட்டித்தரும் கோவை ஸ்டேஷன் விரிவாக்கத்திற்கு நிதி ஒதிக்கீடு இல்லை..
நிறைவேற்றப்பட்டாமல் நின்றுபோயிருக்கும் திட்டங்களிலிருந்து திசை திருப்புவதற்காக–ஒப்புக்காக தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை ரயில் திட்டமும், பெங்களுரூ –சத்யமங்கலம் திட்டமும் அறிவிக்கப்படிருக்கிறது..இவை எல்லாம் "வெறும் கண் துடைப்பே"

மொத்தத்தில் "செயல்படாத அரசின் ஏமாற்று பட்ஜெட்"

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்
மாநிலப் பொருளாளர்–பா.ஜ.க.–தமிழ்நாடு
 

Leave a Reply