ஞானதேசிகன் பேச்சு வருத்தம் தருகிறது  தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பேசியிருப்பது வருத்தம் தருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது; மாநிலங்கள அவையில் புதன் கிழமை நடைபெற்ற இலங்கைத தமிழர் பிரச்சனை குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில்பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன், இலங்கை தமிழர்களை அதிகமாக அழித்தது இலங்கை தமிழர்களே என பேசியிருக்கிறார். இது வருத்தம் தருகிறது . இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது அப்பாவி தமிழர்களின் அழிவுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு உதவிசெய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply