ஐதராபாத் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சென்ற மாதம் 21ஆம் தேதி ஐதாராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைசேர்ந்த இவர்களிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த, தேசியபுலனாய்வு அமைப்புக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சையத் மக்பூல் மற்றும் இம்ரன்கான் என்கிற அந்த 2 பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

டெல்லி திகார்சிறையில் இருக்கும் இவர்கள், ஹைதராபாத் குண்டு வெடிப்பு நிகழ்ந்த தில்சுக்நகரில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், வேவுபார்த்ததுள்ளனர்.

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தானில் நிறுவிய , ரியாஸ் பக்தல் என்பவரின் உத்தரவின்பேரில் இவ்விருவரும் இணைந்து ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு_அமைப்பு சார்பில் தெரிவிக்கபபட்டுள்ளது.

Leave a Reply