பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டம் தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதம்  பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் கட்சியின் புதியதலைவராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்ட ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முன்னாள் தலைவர் நிதின்கட்கரி, மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர்ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழக பா. ஜ.க., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல. கணேசன், லலிதா குமார மங்கலம், சிபி. ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாநில பொதுச் செயலர் எஸ். மோகன்ராஜுலு, வி. ரமேஷ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் பா.ஜ.க உறுப்பினர் சேர்ப்பு, மாநிலஅளவில் கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள், தற்போதைய அரசியல்சூழ்நிலை, சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியினரை தயார்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply