பா.ஜ.க., தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடிக்கு  புகழாரம் குஜராத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை தக்கவைத்துள்ள நரேந்திரமோடியின் செயல்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்கூட ஆச்சரியத்துடன் பார்க்கின்றன’ என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் புகழாரம் சூட்டினர்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது; நரேந்திரமோடியின் ஆட்சி அனைத்து தரப்பினரையும் பிரமிக்கவைக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களில், பலமடங்கு திறமை வாய்ந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் அவர் தந்து வருகிறார்.

தொடர்ந்து 3ஆம் முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்தது மட்டுமின்றி பெரும்பான்மை பலத்துடன் மாநிலத்தில் அவரது தலைமை வெற்றிபெற்றுள்ளது.

மோடிக்கு எதிராக பலசர்ச்சைகளை சிலர் கட்டவிழ்த்து விட்ட போதும் அதையெல்லாம் முறியடித்து அவர் வெற்றிபெற்று வருகிறார் என்றார்.

Leave a Reply