பெட்ரோல் விலை உயர்வு   மக்களுக்கு இழைக்க்க படும்  துரோகம்   பெட்ரோல் விலையை உயர்த்துவது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து பாஜக. செய்தி தொடர்பாளர் ராஜீவ்பிரதாப் ரூடி

செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது , “”நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல்செய்த மறுநாளே, பெட்ரோல் விலையை மத்தியஅரசு உயர்த்தியுள்ளது.

இது மக்களுக்கு செய்யும்துரோகம். இந்த விவகாரத்தை பாஜக. சும்மாவிடாது. இந்தப்பிரச்னை, நாடாளுமன்றத்தின் நடப்புபட்ஜெட் கூட்டத்தொடரில் பெரியஅளவில் எழுப்பப்படும்.

ஏற்கெனவே நாட்டு மக்கள் விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலைஉயர்வு அவர்களை மேலும்பாதிக்கும். மத்திய அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பும் பெட்ரோல்விலையை உயர்த்தியது. அதன் பிறகும் அதைச்செய்துள்ளது என்றார்.

Leave a Reply