யாசின் மாலிக்கின் சவாலுக்கு சோனியாவின் பதில் என்ன?யார் இந்த யாசின் மாலிக்—ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற–தேசவிரோத—பயங்கரவாத அமைப்பின் தலைவர்—காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தரவேண்டும்–அதாவது விடுவிக்க வேண்டும் என்று கோரி அதற்காக போராட்டம் நடத்தி—அதாவது ரத்த களரி

ஏற்படுத்தி—பல பாதுகாப்பு அதிகாரிகளையும் ராணுவவீரர்களையும் கொன்று….அதற்காக சிறையில் 6 ஆண்டுகாலம் வசித்த “தியாகி”

இவருடைய காதல் மனைவி “மிசால் மாலிக்”–பாக்கிஸ்தான் குடிமகள்—லண்டன் ஸ்கூல் யாசின் மாலிக் மிசால் மாலிக் ஆஃப் இகனாமிக்ஸில் பட்டம் பெற்றவர்..யாசின் மாலிக் ஆறாம்வகுப்பு தாண்டாதவர்…

இப்போது என்ன பிரச்சினை…கடந்தவாரம் பாக்கிஸ்தான் விஜயம் செய்த யாசின் மாலிக்–அங்கு பார்லிமெண்ட் தாக்குதலுக்கு தூக்கிலிடப்பட்ட அஃப்சல்குருவுக்கு ஆதரவாக நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்..இதுவே எவ்வளவு தேசபக்தி என்பது ஒருபுறம் இருக்கட்டும்…ஆனால் இக்கூட்டத்தில் இவரோடு செர்ந்து கலந்து கொண்ட மற்ற நபர் யார் தெரியுமா?–2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலின் “பிரெயின்” லக்‌ஷர் ஈ  தொய்பாவின் தலைவந்-ஹபீப் சயீத்…இந்தியாவிடம் ஒப்படைக்கபட வேண்டிய ஒருகொலைக்குற்றவாளி—பயங்கரவாதியுடன் கூட்டத்தில கலந்துகொண்ட யாசின் மாலிக்கை கைது செய்து வழக்கு தொடரவேண்டுமா?–வேண்டாமா?

“நான் வருகின்ற 9ந்தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியா வருகிறேந்-உங்களால் முடிந்தால் என்னை கைதுசெய்து கொள்ளுங்கள்–என் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்–பார்ப்போம்”–என யாசின் மாலிக் சவால் விடுகிறாந்–யாருக்கு—சோனியா தலைமையில் உள்ள இந்திய அரசுக்கு…

நாங்கள் சோனியா கைகளை  பலப்படுத்த தயாராக இருக்கிறோம்…சோனியா –யாசின் மலிக்கின் சவாலை ஏற்கத் தயாரா?–மாலிக்கை கைது செய்து பாஸ்போர்ட்டை முடக்கும் தைரியம் சோனியா அரசுக்கு இருக்கிறதா?  பொருத்திருந்து பார்ப்போம்

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்
மாநிலப் பொருளாளர்–பாஜக

Leave a Reply