இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்காங்கிரஸ் தலைமை யிலான ஐ.மு. கூட்டணி பிரதமர் மன்மோகன் சிங்கை நைட் வாட்ச் மேனாக நியமித்துள்ளது . இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார் .

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முனிறுத்த வேண்டும் எனற அனைவரின் எதிர்பார்ப்பை மெய்பிக்கும் விதமாக டெல்லியில் நடந்து வரும் பா.ஜ.க.,வின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் தமது உரையில் மோடியை வெகுவாக புகழ்ந்திருந்தார். பா.ஜ.க.,வின் மற்றொரு மூத்த தலைவரான அருண் ஜேட்லியும் மோடியை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவுதெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக நடந்து வரும் பா.ஜ.க.,வின் தேசியகவுன்சில் கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது ; காங்கிரஸ் கட்சி யில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் பிரணாப் முகர்ஜி தான். ஆனால் அவரை பிரதமராக்காமல் மன்மோகன் சிங்கை பதவியில் உட்காரவைத்தனர். ஏனெனில் பிரணாப் பிரதமரானால் சோனியாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் எதுவும் கிடைக்காமல் போய்விடும்.

இதனால்தான் அந்தகுடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மையான மன்மோகன் சிங் பிரதமராக உட்கார வைக்கப்பட்டுள்ளார் . ஐ.மு.,கூட்டணியின் நைட்வாட்ச் மேனாகத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கை நியமித்திருக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர் மன்மோகன் சிங். மக்களோடு தொடர்பில்லாத ஒருஅரசாக மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகாலமாக காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டது.

நாட்டின் நன்மதிப்பையே இந்த அரசு நாசமாக்கி விட்டது. காங்கிரஸ் கட்சி ‘குடும்ப’ அரசியலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக நாட்டையே காங்கிரஸ் கட்சி பலி கொடுத்து விட்டது .

குஜராத்தில் நடப்பது எனது ஆட்சியல்ல.. பாஜக.,வின் ஆட்சி.. இந்தவெற்றி என்னால் மட்டும் சாத்தியமானதல்ல.. லட்சக்கணக்கான பா,ஜ,க தொண்டர்களினால் சாத்தியமானது. ஒருசிறந்த அரசியல்வாதியால் நாட்டின் தலைஎழுத்தை மாற்றி அமைக்கமுடியும். பாஜக., ஆட்சி செலுத்தக்கூடிய மாநிலங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்நாட்டின் உண்மையான பிரதமர் வாஜ்பாய் மட்டும் தான்.. எங்களுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தநாட்டுக்கு நன்மைசெய்வோம் என மோடி பேசினார்.

Leave a Reply