ஹெலிகாப்டர் ஊழல் தியாகியிடம் விசாரணை ஹெலிகாப்டர் ஊழல் குறித்து முன்னாள் விமானப் படை தளபதி எஸ்பி., தியாகி மற்றும் அவரது உறவினர்களிடம் சிபிஐ., தீவிர விசாரணை மேற்கொண்டது .

விவிஐபி.,க்கள் பயணம்செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தகவல்வெளியானது. இது குறித்து இத்தாலியில் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் விமானப் படை முன்னாள் தளபதி தியாகிக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ., முடிவுசெய்தது.

இதனையடுத்து சிபிஐ., தலைமையகத்தில் அவரிடமும் அவரது உறவினர்களிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்தினர். இடைத் தரகராக செயல்பட்டதாக கூறப்படும், கார்லோ ஜெரோசா, குயிடோ ஹஸ்ச் கேயுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

Leave a Reply