தோற்றுவிடுவோம் என்பதை உணர்ந்துதான் பிரதமர் பதவியின்  மீது விருப்பம்  இல்லை என்கிறார் பிரதமராக தன்னால் வர முடியாது என்பதை உணர்ந்துதான், அந்த பதவியின் மீது தனக்கு விருப்பம் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். என்று , பாஜக செய்தித்தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவித்ததாவது : அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.க, தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அதிகஇடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றும். இதனை நன்குணர்ந்துள்ளதால் தான், தனக்கு பிரதமர் பதவியின் மீது விருப்பம் இல்லை என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டு நலன்கருதி, தனக்கு திருமணம் ; குழந்தைகள் வேண்டாம் என்று , ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால், எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள, லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் திருமணம்செய்து கொள்ளவில்லையா… குழந்தைகள் பெற்றுக் கொள்ள வில்லையா? அவர்களும் நம் நாட்டு நலன் கருதிதானே பணியாற்றுகிறார்கள். என்று ஷா நவாஸ் உசேன் கூறினார்.

Leave a Reply