தன்னம்பிக்கையை தரும் ஸ்கல்பட் எஜுக்கேஷன்அண்ணா பல்கலைகழகத்தின் கல்விசார் பல்ஊடக மையம் “2013 எதிர்காலத்தினை வடிவமைத்தல் ” என்ற திட்டத்தினை துவங்கியுள்ளது . அதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்களாக (1-3 மார்ச்) “நம்பிக்கை” என்ற பயிற்சி முகாம் நடத்தப்பட்டது . கிண்டி பொறியியல் கல்லூரி

மற்றும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர் பங்கேற்றனர் .

சென்னையிலுள்ள “ஸ்கல்பட் எஜுக்கேஷன் ” நிறுவனம் தனது சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இந்த பயிற்சினை நடத்தியது .

இப்பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசிய இம்மைய இயக்குனர் பேராசிரியர் முனைவர் திரு .கௌரி தனது உரையில் “இதுபோன்ற பயிற்சிகள் இக்காலகட்டத்து மாணவ மாணவியர்க்கு மிகவும் தேவைப்படுகின்றன . தாழ்வு மனப்பாண்மை , மன அழுத்தம் , படிப்பில் உற்சாகமின்மை போன்றவற்றால் பல மாணவ மாணவியர் சில நேரங்களில்

எதிர்பாராத ,இயற்கைக்கு மாறான முடிவுகளை தேடிக்கொள்கின்றனர்.அதனை தடுக்கும் விதமாக இவ்வகை பயிற்சிகளின் மூலம் மாணவ மாணவியருக்கு நேர்மறை எண்ணங்களையும் , மனவுறுதியையும் வளர்க்கும் எண்ணத்தில் இந்த பயிற்சி கொடுக்கப்பட்டது .

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் திரு.சிவநேசன் , “மாணவ மாணவியர் இதுபோன்ற பயிற்சிமுகாம்களில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் இந்தியாவின் சிறந்த குடிமக்களாக விளங்கிட வாய்ப்புள்ளது “என்று தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், இப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் திரு.காளிராஜ் கூறுகையில் , “இதுபோன்ற பல அரிய நவீன திட்டங்களை இப்பல்கலைக்கழகம் தீட்டியுள்ளது ,அவை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு,மாணவ சமுதாயம் வளம்மிகுந்த சமுதாயமாக வளர்வதற்கு வழிகள் பலவுள்ளன “என தெரிவித்தார்  தன்னம்பிக்கை.

இப்பயிற்சி முகாமினை நடத்திய “ஸ்கல்பட் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் ” நிறுவனத்தின் நிறுவனதலைவர் திரு.மாணிக்க பாரதி கூறியதாவது “எனது பள்ளி ,கல்லூரி நாட்களில் எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு பயிற்சி வகுப்பின் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.அதன் பலனை உணர்ந்தவன் நான்.ஆகவேதான்,எனக்கு கிடைத்ததை விடவும் சிறந்த ஒரு பயிற்சி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும்,அதன்மூலம் அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவதாக கூறினார்.மேலும்,அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 1 லட்சம் மாணவ மாணவியர் தங்கள் வாழ்வில் நல்லதோர் மாற்றத்தை உணர எங்கள் பயிற்சி வகுப்புகள் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இதன்மூலம் நாளைய இந்திய சமுதாயம் எழுச்சிமிக்க ,ஆற்றல்மிக்க ஒன்றாய் உருவாக எங்கள் நிறுவனம் தொடர்ந்து பங்களிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான திரு.வர்மா கூறியதாவது, எங்களது நிறுவனம் சென்னை ,திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள மாணவ மாணவியர்க்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு பின்தங்கிய, கிராமப்புற மற்றும் மழைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான நிகழ்சிகளையும் ,பயிற்சி வகுப்புகளையும் நடத்தும். வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தேவையான பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமாக எங்கள் பயிற்சி வகுப்புகள் அமைந்திருப்பதுடன், கல்வி கற்பித்தலில் வேண்டத்தக்க முன்னேற்றத்தினை கொண்டுவர எங்கள் நிறுவனம் ஒரு முன்னோடியாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புக்கு :SculptEducation@gmail.com

Leave a Reply