வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைவங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக, வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. நிலைமையை நேரில் ஆய்வு செய்ய , வங்கதேசத்துக்கு அனைத்துகட்சி குழுவை அனுப்பவேண்டும்’ என்று ராஜ்ய சபாவில், பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது .

இது குறித்து பாஜக எம்பி தருண் விஜய் பேசியதாவது: வங்க தேசத்தில், இந்துக்களுக்கு எதிராக, கொடியகுற்றங்கள் அரங்கேறி வருகிறது . இந்துக்கள் மற்றும் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் மீது, வன்முறை கட்ட விழ்த்து விடப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புதான், இந்த கொடுமைகளை நிகழ்த்துகிறது.வங்க தேசம் உருவான போது, அங்குள்ள மொத்த மக்கள்தொகையில், இந்துக்கள், 28 சதவீதம் இருந்தனர். தொடர்தாக்குதல்களால், இப்போது, 9 சதவீதம் இந்துக்களே வசிக்கின்றனர்.

வங்க தேசத்தை சேர்ந்த ஏராளமான இந்துக்கள், தாக்குதலக்கு பயந்து, அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

வங்க தேசத்தில் தற்போதைய நிலைமையை ஆய்வுசெய்ய, உடனடியாக அனைத்து கட்சி குழுவை அங்கு அனுப்பவேண்டும்.என்று தருண்விஜய் பேசினார்.

Leave a Reply