அமெரிக்காவின்  டிவி ஏசியாசேனலில்   மோடி உரை ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவின் வார்ட்டன் பல்கலை கழகத்தின் அனாகரிகமான செயலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் மோடி உரை நிகழ்த்துவதற்கு வேறுஏற்பாடு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில் வேனியாவில் இருக்கும் வார்ட்டன் பல்கலைக் கழகத்தில் , இந்திய மாணவ பொருளாதாரஅமைப்பின் சார்பில் வரும் மார்ச் 22, 23ம் தேதிகளில் மாநாடு நடக்கிறது.

இந்த நிகழ்சிகளில் வீடியோ கான்பரஸ் மூலம் தலைமை உரையாற்ற குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுத்தது.

ஆனால், பேராசிரியர்கள், மாணவர்களில் ஒரு சிலர் எதிர்ப்புதெரிவிப்பதாக கூறி, மோடி நிகழ்ச்சியை திடீரென ரத்துசெய்தது. இதற்கு பா.ஜ.க , சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க., வின் வெளிநாட்டு வாழ்தொண்டர்கள் பிரிவு, வடஅமெரிக்கர்கள் மற்றும் கனடா மக்களின் மத்தியில் வீடியோ கான்பரஸ் மூலம் மோடி உரைநிகழ்த்த ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, இந்திய நேரப்படி 10ம் தேதி காலை 6.30 மணிக்கு மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரை நிகழ்த்துகிறார்.

இதை அமெரிக்காவில் இருக்கும் டிவி ஏசியாசேனல் நேரடியாக ஒளி பரப்புகிறது. அகமதாபாத்திலிருந்து மோடி உரை ஒளிபரப்பாகிறது.

இதை நியூஜெர்சி மற்றும் சிகாகோவில் வசிக்கும் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளிநாட்டு வாழ் பா.ஜ.க தொண்டர்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய்ஜாலி அறிவித்துள்ளார் . இதற்கிடையில், வார்ட்டன் பல்கலைக் கழகம் மோடியின் நிகழ்ச்சியை ரத்துசெய்தது தவறு என 92.5 பேர் கருத்துகணிப்பில் கூறியுள்ளதாக வால்ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply