பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து முக ருத்ராட்சம்பதின்மூன்று முக ருத்ராட்சம் காம தேவனின் அருள் பெற்றது . இந்திரன், மகாலட்சுமி , முருக பெருமான் ஆகியோரின் அருள் இணைந்தது.இந்த மணி விஞ்ஞான ஆராய்ச்சி ,ரசவாதம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக சிறந்த பலனை தரும்.சகல சுகங்களையும் அனுபவித்து பகட்டான வாழ்வை வாழ விரும்புபவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். தாய், தந்தை சகோதரி,குரு ஆகியோரைக் கொன்ற பாவங்களைப் போக்கும்.

இதை அணிபவர்கள் ரசவாதம் போன்ற கலைகளில் வெற்றி பெறுவதோடு ,மகன்கள்,சித்தர்கள் தேவ தேவதைகளின் தரிசனம் கிடைக்கப் பெறுவார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.இவ்வுலக வாழ்விற்கு பிறகு சொர்க்க வாழ்வை அளிக்க வல்லது. இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் மகாலக்ஷ்மியின் ஸ்தோத்திரத்தைக் கூறி வந்தால் , அனைத்துச் செல்வங்களையும் பெறுவார்கள். இம்மனியும் கிடைப்பது அரிது.

யார் அணியலாம்:

கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் ,நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் பதவியில் இருபவர்கல்செல்வ வளத்தை விரும்புபவர்கள் ஆகியோர் அணியலாம்.

மருத்துவ பயன்கள்:

இது தொண்டை நோய்கள், கழுத்து நோய், சிறுநீரக பிரச்சனைகள் , பிறப்பு உறுப்புகள் , தைராய்டு சுரப்பியில் தோன்றும் பிரச்சனை , வீரியத்தன்மை கோளாறு, கண்நோய்கள் , கர்ப்பம் தரிப்பதில் உள்ள பிரச்சனைகள், அஜீரணம் ,மூட்டு வலி, நாடி நரம்புகளில் உள்ள அடைப்புகள் போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது . அனைத்து வித மன நோய்களையும் குணமாக்கும்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இது ஆறுமுக ருத்ராட்சத்தின் பலன்களை கொடுக்கும். ஆன்மீக வளர்ச்சி, தியானத்தில் உயர்வு தரும்.

ருத்ராட்ச மந்திரம்: ஓம் ஹ்ரீம் நமோந் நமஹ

பதினான்கு முக ருத்ராட்சம் :

பதினான்கு முக ருத்ராட்சம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நேரடியாகத் தோன்றியது என்பதால் மிகவும் சக்தி வாய்ந்தது. அனுமனின் அருளும் இணைந்தது . இந்த மணி ஆறு ஆதாரச் சக்கரங்களில் ஆக்ஞை சக்கரத்தைக் குறிக்கிறது. இதை அணிபவர்கள் தங்கள் முன்னோர்களையும் பாவங்களிலிருந்து விடுவிக்கின்றனர்.இந்த மணியை அணிபவர்கள் உலகிலுள்ள எந்த தீய சக்தியையும் தடுத்து ,தர்மத்தை நிலைநாட்ட் முடியும்.மருத்துவ ரீதியாக மிகுந்த பலன்களை தர வல்லது.
இம்மனியும் அரிதாகவே கிடைக்கிறது.

யார் அணியலாம் :

மனித வள மேம்பாடு ,பல மனிதர்களை புரிந்துகொள்ள வேண்டிய அதிகாரத்தில் இருப்ப வர்கள் இதை அணிந்தால் மிகுந்த பலன் கிட்டும்.ஏற்றுமதித் தொழில் இருப்பவர்களுக்கும் சிறந்த பலனை தர வல்லது. சனிக் கிரகத்தால் தோஷம் அடைந்தவர்கள் இதை அணிந்தால் சனி தோஷம் விலகும்.

மருத்துவ பயன்கள்:

இது பலவீனம் ,வயிற்றுவலி , பக்கவாதம் , வலிப்பு, வாய்பேச முடியாத நிலை,கருச்சிதைவு, இருதயநோய், கண்நோய் , தோல் நோய், காயங்கள், குடற்புண், மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்கும். உயிரணுக்களை சுத்தம் சிது ஓஜஸ் தரும்.
பதினான்கு முக ருத்ராட்சத்தை நீரில் ஊறவைத்து , அந்த நீரை பருகி அவன்தாள் தோலிலுள்ள சுருக்கங்கள் மறைந்து என்றும் இளமை தோற்றத்தைப் பெறலாம்.

தாம்பத்தியத்தில் சரிவர ஈடுபட முடியாதவர்கள் இந்த ,மணியை தேனில் 24 மணி நேரம் ஊறவைத்து ,தினமும் அந்த தேனை பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும். இந்த மணியை காய்ச்சிய பசும்பாலில் சில மணிநேரம் ஊறவைத்து ,அந்த பாளை குழந்தைகளுக்கு அருந்தக் கொடுத்தால் ஜுரம் போன்ற நோய்கள் அண்டாது.ஞாபக சக்தியை வளர்க்கும்.

இந்த மணியை திராட்சை ரசத்தோடு சேர்த்து தினமும் 0.25 மில்லி கிராம் உட்கொண்டு வந்தால் , பெண்கள் கருத்தரிப்பதில் உள்ள பிரச்சனைகள் விலகும். திக்குவாயை நீக்கும்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இது ஜோப்திடத்தில் மஹா சனி என்று அழைக்கப்படுகிறது. இது சனியின் தீயபலன்களைத் தடுக்கும்

ருத்ராட்ச மந்திரம் : ஓம் நமஹ

பதினைந்து முக ருத்ராட்சம்:

பதினைந்து முக ருத்ராட்சம் சிவபெருமானின் பசுபதி அம்சம் நிறைந்தது . இந்த மணியின் பலன்கள் பெரும்பாலும் பதினான்கு முக ருத்ராட்சத்தை போன்றது . இதை அணிவதாலும் ,பூஜிப்பதாலும் இவ்வுலக வாழ்விலும்,பர வாழ்விலும் நற் பயன்களைப் பெறலாம் . இம்மணியும் அரிதாகவே கிடைக்கிறது .

யார் அணியலாம் :

ஆன்மீக முன்னேற்றத்தை அடைய விரும்புபவர்கள் ,வாழ்வில் திருப்தியும் மகிழ்ச்சியும் இல்லாதவர்கள் ,செல்வக் குறைபாடு உள்ளவர்கள் இதை அணிந்தால் நிச்சயம் பலன் உண்டு.

மருத்துவப் பயன்கள்:

இது கண் ,இருதயம் , பொதுவான நோய்கள் , தொண்டை பிரச்சனைகள் போன்றவற்றை குணமாக்குகிறது .

ருத்ராட்சமும் ஜோதிடமும் :

பதினான்கு முக ருத்றாட்சத்தின் பலன்களை தரும் .சீரிய சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆற்றல் தரும் .சிந்தனை வீரியம் உள்ளுணர்வு தரும்.

நன்றி: ருத்திராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்தி

Leave a Reply