மத்திய அரசு தமிழக விவசாயிகளை காக்க தவறிவிட்டதுதிருத்துறைப் பூண்டியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக., மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.:-

இதில் பாஜக மாநில் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது. மத்திய அரசு தமிழக விவசாயிகளை காக்க தவறிவிட்டது. உரியநேரத்தில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை பெற்றுதர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. கண்துடைப்பிற்காக பயிர்களை ஆய்வுசெய்துவிட்டு உரிய நிவாரண தொகையை வழங்கவில்லை.

தமிழக அரசு வழங்கிய நிவாரணதொகை விவசாயிகளுக்கு பெரும்நிம்மதி தந்திருக்கிறது.

இருந்தாலும் அந்ததொகை போதாது. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால்சுட்டும், வலைகளை அறுத்தும் கொடுமை படுத்தி வருகிறது. இதை மத்தியஅரசு வேடிக்கை பார்க்கிறது. இதிலிருந்து மத்திய அரசு செயல்லிழந்து விட்டது என்று தெரிகிறது என பேசினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாநில துணைத் தலைவர் எம்.எஸ் ராமலிங்கம், கோட்ட பொறுப்பாளர் அய்யாரப்பன். மாவட்ட துணை தலைவர் அரிச் சந்திரன், மாவட்ட பொருளாளர் சிவக் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளர் இளசு.மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ராஜவேல், நகரதலைவர் வினோத், நகரபொறுப்பாளர் மாணிக்கம், ஒன்றிய தலைவர் இளங்கோ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வசந்த் நன்றி கூறினார்.

Leave a Reply