பஸ் டிரைவர் ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை டில்லி மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங், திகார் சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளான்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி‌ ஓடும்பஸ்சில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ மாணவி 6பேர் கொண்ட கும்பலால் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு மாணவியும், அவரது நண்பரும் இரும்புகம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும்பஸ்சில் இருந்து வீசிஎறியப்பட்டனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவமாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம தொடர்பாக பஸ்டிரைவர் ராம்சிங் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், பவன்குப்தா,வினய்சர்மா,அக்ஷை தாகூர் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்து டில்லி திகார்சிறையில் அடைத்தனர்.

Leave a Reply