பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் மீது  தாக்குதல்  பாஜக கடும் கண்டனம்   பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மனித உரிமை மீறல் என்பதால், இந்த விஷயத்தை இந்தியா சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாநிலங்களவையில் பூஜ்யநேரத்தில் பாஜக உறுப்பினர் நஜ்மாஹெப்துல்லா இப்பிரச்னையை எழுப்பி பேசியதாவது , பாகிஸ்தான் பிரதமர் ராஜாபர்வேஸ் அஷ்ரப் உலக அமைதிக்காக அஜ்மீர்தர்காவில் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தானில்வாழும் கிறிஸ்தவ மைனாரிட்டி மக்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கு வாழும் ஹிந்துக்களும் கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றனர். இந்தப்பிரச்னையை நாம் சர்வதேச அளவில் ஏன் கொண்டு செல்லக்கூடாது.

பிரிவினையின் போது, பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் மைனாரிட்டியாக ஆக்கபட்டனர்.

ஹிந்துப்பெண்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். ஷியாபிரிவு முஸ்லிம்கள்கூட தாக்கப் படுகின்றனர். அவர்களின் மசூதிகள் அழிக்கபடுகின்றன. இந்த தாக்குதல்கள் கண்டனத்துக் குரியவை என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply