ஐஏஎஸ் தேர்வுகளை தமிழிலேயே எழுதிட அனுமதிவழங்க உடனடி நடவடிக்கை தேவை மத்திய அரசு பணியாளர் தேரவு ஆணையம் சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையின் படி, பட்டப் படிப்புகளில் தமிழ்வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுதமுடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதன்காரணமாக தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் ஆங்கிலவழி பட்டப் படிப்புகளில் தேர்வு பெற்றிருந்தாலும் ஆங்கில மொழியில் தேர்வுகளை எழுதுவது கடினமாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு தங்கள் தாய் மொழியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை எழுதவிரும்பினால் அதற்கு தடை விதிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது .வரலாறு, புவியியல் உள்ளிட்ட விருப்ப பாடங்களை யார் வேண்டும் என்றாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலையில் தமிழ்இலக்கியம் படிப்பிற்கு மட்டும் புதுஆணையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இம்மாதிரியான கட்டுப்பாடுகள் ஏதும் பிறமொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு விதிக்கப்படவில்லை. புது ஆணையின் படி தமிழக கிராமப்புற மாணவர்களும் ,இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்.எனவே இதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்து தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் எந்த மொழியை பயிற்று மொழியாக கொண்டிருந்தாலும் அனைவரும் ஐஏஎஸ் போன்ற தேர்வுகளை தமிழிலேயே எழுதிட அனுமதிவழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கேட்டுக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply