கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு போன இத்தாலிய கடற்படை வீரர்கள்…"கொச்சி கொலைகாரர்கள்."–.இனி திரும்ப மாட்டார்கள்– திருப்பி அனுப்ப மாட்டோம்–உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் –என இத்தாலிய அரசு இந்திய அரசுக்கு சொல்லிவிட்டது…

நாம் எங்கு கொண்டு மூஞ்சியை வைத்துக்கொள்வது-
-நம் சுப்ரீம் கோர்ட்டின் கவுரவம் என்ன ஆவது?–
ஏன் நம் நாட்டு மக்கள் கவுரம் என்ன ஆவது?

நான் 19.2.2012 அன்றே "சோனியா கப்பலுக்கு சோனியாவே சிறையா ?—என எழுதியதை "மறு பதிப்பு செய்திருக்கிறேன்"

நான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி பார்த்தீர்களா?

இந்திய மீனவர்கள் இருவரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இத்தாலிய எண்ணெய் கப்பல் "என்ரிகா லெக்ஸி"..சிறை (….இல்லை..இல்லை… மரியாதையாக அழைத்து வரப்பட்டு ) பிடிக்கப்பட்டு கொச்சி துறைமுகத்துக்குள் கொண்டுவரப்பட்டுரிக்கிறது..

செய்தியை படித்தவுடனே  சந்தேகப்பட்டேன்..இலங்கை காரனையே ஒன்றும் செய்யமுடியாத நாம்..இத்தாலிய "காட்டுராணி" சோனியா மெய்னோ நம்மை ஆள்கிறபோது..இத்தாலிய கப்பல் சிறை பிடிப்பா?—சிரிப்புத்தான் வந்தது..

இந்திய கடற்படை அதிகாரியின் வேகவேகமான அறிக்கை…புத்திசாலித்தனமாக இத்தாலிய கப்பலை துறைமுகத்துக்கு கொண்டுவந்ததாக பேட்டிகள்…"இது மிருகத்தனமான கொலை"—என கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சண்டியின் அறிக்கை..

கடல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன—என சோனியாவின் அடிவருடிகள் பாதுகாப்பு மந்திரி அந்தோணியும் கப்பல் மந்திரி வாசனும் பேட்டிகள்..தீவிர நடவடிக்கையில் இறங்கிவிட்டோம்—என எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு…

கப்பல் கைது செய்யப்பட்டுவிடும்..சுட்டவனுக்கு தண்டனை கிடைத்து விடும் ..நீதிதேவதையே உனக்கு நன்றி..என சொல்லவாயெடுத்தபோது…சூது வெளியெ தெரிய ஆரம்பித்தது..

 இவ்வளவு வேகமாக காங்கிரஸ்காரன் பேசுகிறானே…இந்தியாவையே இத்தாலி சோனியாவிடம் அடகுவைத்த பிறகு ஒரு "ஜுஜுபி" கப்பலை கைது செய்ய "நம்மாள் இவ்வளவு பரபரப்பு காட்டுகிறானே என்ற சந்தேகம் மட்டும் "-தொடர்ந்து மனதை வாட்டிக்கொண்டிருந்தது..

தனது குடும்ப நண்பர் கொள்ளைக்காரன் "குவட்ரோச்சியை" விடுவித்து இத்தாலிக்கு அனுப்பிவைத்த சோனியாவாவது கப்பலை கைது செய்வதாவது…என்று நினைத்தது உண்மையாகிவிட்டது..

கப்பலை விடுவிக்க காரணம் கண்டுபிடித்து விட்டார்கள்…இத்தாலியன் ..இந்திய மீனவர்களை சுட்டது "இந்திய கடல் எல்லையில் " இல்லையாம்..அதாவது 12 கடல் மைலகளுக்குள் இல்லையாம்..

இந்தியர்கள் சுடப்பட்டபோது இத்தாலிய கப்பல் 18முதல் 20 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்ததாம்..அப்பாடா …சூப்பர் காரணம் கண்டு பிடித்து விட்டார்கள்..இந்திய சட்டம் அங்கு செல்லாதாம்.. இனி விடுதலைதான்

…காட்டுராணிக்கு ஜெ…காங்கிரஸுக்கு ஜெ…இத்தாலிக்கு ஜெ…
@@ இப்போது நான் எழுதியது உண்மையாகிவிட்டதல்லவா?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்  

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply