ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து  சிபிஐ. விசாரிக்க வேண்டும் சோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற கண் காணிப்பில் சிபிஐ. விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , ராபர்ட்வதேரா நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது , அரசின் கொள்கைகள் தனி நபருக்காக என்பது போன்று செயல்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி ஆளும் ஹரியாணாவில் வதேரா நிலங்களை முறை கேடாக வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது . இந்நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அவர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ. விசாரிக்கவேண்டும் என்பதே பாஜக.,வின் கோரிக்கை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply